சிவகங்கை அக்டோபர் 10
சிவகங்கையில் உள்ள ராணி வேலுநாச்சியார் மணிமண்டப வளாகத்தில் வேலுநாச்சியாரின் தோழியான குயிலிக்கு சிலை நிறுவப்பட்டிருந்தது இந்தச் சிலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் குயிலி சிலைக்கு மாலைகள் அணிவித்து சிறப்பித்தார் . இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி மாங்குடி மாவட்ட துணைத் தலைவர் த. சேங்கை மாறன் நகர் மன்ற தலைவர் சி.எம். துரை ஆனந்த் மாநில ஆதிதிராவிட நல விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டமைப்பின் மாநில தலைவர் ஏ.பூமிநாதன். சிவகங்கை மாவட்ட செயலாளர் பெரியார் ராமு உள்பட பல்வேறு சமுதாயத் தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டு சிலைக்கு மாலைகள் அணிவித்தனர்.