மதுரை அக்டோபர் 7,
மதுரை மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மைய மாநில கௌரவ தலைவர் வீரபாண்டி நவநீதன் நினைவாக முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழாவினை காவலர் வினோத் மற்றும் முடக்காத்தான் மணி இணைந்து நடத்தும் விழாவினை வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைசர் மூர்த்தி கொடி அசைத்து துவக்கி வைத்தார். உடன் சோழவந்தான் சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடேசன், ஆனையூர் பகுதி செயலாளர் மருது பாண்டியன், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வீரராகவன், வீரபாண்டி ஊராட்சி மன்றத்தலைவர் சுகபிரியா விஜயக்குமார் கலந்து கொண்டனர். வடமாடு மஞ்சுவிரட்டில் மொத்தம் 15 மாடுகள் பங்கேற்றனர். இதில் ஒரு மாட்டுக்கு 9 மாடுபிடி வீரர் கலந்து கொண்டனர். மாட்டு உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் பரிசு வழங்கி கெளரவபடுத்தினர். இந்நிகழ்ச்சியை
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் மற்றும் விழா அமைப்பாளர்கள்
மற்றும் கிராம பொதுமக்கள் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். மேலும்
ஒத்தக்கடை காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஊமச்சிகுளம் காவல் ஆய்வாளர் சாந்தி பாலாஜி போக்குவரத்தை சீர் செய்து சிறப்பாக பாதுகாப்பு அளித்து இருந்தனர்.