நிலக்கோட்டை,அக்.06
திண்டுக்கல் மாவட்டம்
நிலக்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்கள் தோறும் சிசிடிவி கேமரா பொறுத்துதல்
குழந்தை திருமண தடுப்பு பெண் வன்கொடுமை மற்றும் ஆன்லைன் மோசடி குறித்த சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றங்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவுப்படி டிஎஸ்பி செந்தில்குமார் ஆலோசனைப்படி உச்சணம்பட்டி கிராமத்தில் சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார், ஊராட்சி மன்றத்தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார்,
காவலர் அனிதா வரவேற்றார்,
இதனைத் தொடர்ந்து சார்பு ஆய்வாளர் முத்தையா பேசியபோது அதிகரித்து வரும் திருட்டு கொலை கொள்ளை குற்றச் சம்பங்களை தடுக்க கிராமங்கள் தோறும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்துதல் குழந்தை திருமண தடுப்பு பெண் வன்கொடுமை ஆன்லைன் மோசடி மற்றும் போதை ஒழிப்பு குறித்தும் இலவச தொடர் எண்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்,
இதேபோல சிலுக்குவார்பட்டி,கரியாம்பட்டி
முசுவனூத்து
அணைப்பட்டி ஆகிய 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இதேபோன்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்,
இந்த நிகழ்ச்சியில் சார்பு ஆய்வாளர்கள் தயாளன்,
அண்ணாத்துரை,
காவலர்கள் நாகராணி,
ஜெகதீஸ் ஆகியோர் உட்பட சமூக ஆர்வளர்கள், மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.