நாகர்கோவில் அக் 3
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்ணில் புதிய இந்தியா இயக்கம் அனைத்து பொது சேவை மற்றும் உரிமைக்கான அமைப்பு சார்பில் மது மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மது மற்றும் போதை பொருட்கள் உயிருக்கும், உடல் நலத்திற்கும், குடும்ப கௌரவத்திற்கும், பொருளாதாரத்திற்கும், பண்பாடு மற்றும் கலாச்சாரத்திற்கும் எதிரானது. இளைஞர்கள், மாணவ செல்வங்கள், பெண்கள் ஆகியோர் இதனால் மிகப்பெரிய இழப்புக்கு ஆளாகின்றார்கள். மது போதை பொருட்களால் ஒட்டுமொத்த குடும்பமே சீரழிந்து பாழ் பட்டு போகிறது, பலர் திருமண வாழ்க்கையில் பிரிந்து சீரழிந்து வருகிறது. முன்னோர்கள் வாழ்ந்து காட்டிய பாதைகள் எல்லாம் தடம் புரண்டு செல்கிறது. என்றும் போதைக்கு உள்ளானவர்கள் பெரும்பாலானவர்கள் கண் பார்வை இழந்தும், சில குடும்பங்களை வழிநடத்த வேண்டிய தலைவர்களை இழந்தும், கணவன் மனைவி உறவு சீர்கெட்டும், குடும்பங்களில் பணக்கஷ்டம், உடல் ஆரோக்கியம் இழப்பு, உறவினர்கள் நண்பர்கள் இழப்பு, இதை எல்லாவற்றையும் விட அதிக மது போதையில் பெற்று பிள்ளைகள் என்று கூட தெரியாமல் முறை தவறி நடப்பது, போதை தலைக்கேறி ரோட்டோரத்தில் விழுந்து கிடப்பது போன்ற பல வகை தீமைகளை தரும் மது போதை பொருள்களை நாம் ஒன்றிணைந்து ஒளித்திட வேண்டும் என்ற கோஷங்கள் முழங்க ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.



