அரியலூர், அக்;02
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் தளவாய் காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட தெத்தேரி வெள்ளாற்றில் தொடர்ச்சியாக மணல் திருடர்கள் மாட்டு வண்டிகளில் மணலை திருடி சென்று மணல் மாபியாக்களுக்கு மறைவிடங்களில் கொட்டி உதவி செய்து வருகின்றனர். பின்னர் மணல் மாபியாக்கள் அந்த மணலை லாரிகள் மூலமாக வெளி மாவட்டங்களுக்கும், வெளியூருக்கும் ஏற்றி சப்பளை செய்து வருகின்றனர். தொடரும் மணல் திருட்டை தடுக்க காவல்துறை என்ன தான் முயற்சி செய்தாலும் ,மணல் திருடர்கள் ஆதிக்கம் கொடி கட்டி பறந்து வருகிறது .இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தாலும் மணல் திருட்டை தடுக்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. மணல் திருட்டை தடுக்க சிறப்பு படைகள் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் தமிழ்ப் பேரரசு கட்சி கேட்டுக் கொள்கிறது. மணல் திருடர்களின் வேட்டை தொடருமா? மாவட்ட நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்