நாகர்கோவில் செப் 29
கன்னியாகுமரி மாவட்டத்தில் தூய்மையான கட்டமைப்பு உருவாக்கும் பொருட்டு இந்திய அஞ்சல் துறை சார்பாக தூய்மையே சேவை 2024 என்ற பெயரில் செப்டம்பர் 17 முதல் 2 அக்டோபர் வரை கடைபிடிக்கப்படுகின்றது.இதன் ஒரு பகுதியாக புத்தேரி கிராமத்தில் உள்ள ஆணை பொத்தை என்ற இடத்தில் குடிநீர் தேக்க தொட்டியின் அருகில் இருந்த புதர்கள் மற்றும் புற்களை அகற்றி சுத்தம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டு தபால் துறையின் ஊழியர்களால் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கோட்டத்தின் கண்காணிப்பாளர் க செந்தில்குமார் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியானது நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தின் முதன்மை அதிகாரி எஸ் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்திய அனைவருக்கும் புத்தேரி பஞ்சாயத்து தலைவர் கண்ணன் நன்றி தெரிவித்தார். இதில் நாகர்கோவில் கோட்ட, உபகோட்ட, தலைமை தபால் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.