கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தின்னகழனி கிராமத்தை சேர்ந்த சின்னன்னன் மகன் கணபதி என்பவரின் வீட்டிற்கு பின்புறம், ஏப்ரல் 27 ஆம் தேதி கே.ஆர்.பி டேம்க்கு சென்றுவிட்டு திரும்பி எர்டிகா காரில் வந்துகொண்டிருந்த நான்கு நபர்கள், நின்று மது போதையில் கூச்சலிட்டு கொண்டிருந்துள்ளனர். அப்போது சின்னன்னன் மற்றும் அவருடைய மகன்கள் வெற்றி, சிவா ஆகியோர் அங்கு சென்று அவர்களை பார்த்து எதற்காக இங்கு நின்று கூச்சலிடுகிறீர்கள் என்று கேட்டபோது மேற்படி நபர்களுக்கும் சின்னன்னன் குடும்பத்தாருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு மேற்படி நான்கு நபர்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். மீண்டும் மேற்படி நபர்கள் நான்கு பேரும் இரண்டு பைக்குகளில் சின்னன்னன் வீட்டிற்கு முன்பு வந்து சின்னன்னன் மற்றும் அவரது மகன்களிடம் வாய் தகராறு செய்துவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றுள்ளனர். அப்போது சின்னன்னன் மகன் வெற்றி அதே ஊரை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு போன் செய்து பைக்கில் செல்லும் நபர்களை தடுத்து நிறுத்தும்படி கூறியுள்ளார். அதன் பேரில் கார்த்திக் மற்றும் அவருடைய அப்பா தேவராஜ் ஆகியோர் சாலைக்கு சென்று மேற்படி நபர்களை தடுக்க முற்பட்டபோது, எதிரிகள் இருசக்கர வாகனத்தால் கார்த்திக் மீது மோதிவிட்டு கட்டையால் இருவரையும் தாக்கியுள்ளனர். மேற்படி தாக்குதலில் கார்த்திக் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். தேவராஜீக்கு தலையில் லேசான இரத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கார்த்திக் இறந்துள்ளார். தேவராஜ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்துள்ளார்.
மேற்படி சம்பவம் சம்மந்தமாக தேவராஜ் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல்நிலைய குற்ற எண் 160/2024 u/s 294(b), 324, 302
IPC ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகள் 1. அருண் (34), 2. சிவா (25), 3.கணேஷ் (24), 4. பீம் @ சாய் கார்த்திக் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை
கைப்பற்றியதிலிருந்தும், சாட்சிகளை விசாரணை செய்ததிலிருந்தும். கைது செய்யப்பட்ட எதிரிகள் கொடுத்த வாக்குமூலத்திலிருந்தும் எதிரிகள் சம்பவத்தன்று கே.ஆர்.பி அணை பகுதிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் சின்னன்னன் வீட்டிற்கு
அருகில் (பீர் அருந்தியதால் ஏற்பட்ட) மது போதையில் கூச்சல்
போட்டுக்கொண்டிருந்ததும் அருகிலுள்ள சின்னன்னன் குடும்பத்தார் அதை தட்டி
கேட்டதும் அப்போது அங்கிருந்து புறப்பட்டு சென்ற எதிரிகள் மீண்டும் இருசக்கர வாகனத்தில் வந்து சின்னன்னன் குடும்பத்தாரிடம் தகராறு செய்துவிட்டு
சென்றதும் அவர்களை தடுக்க முற்பட்ட கார்த்திக் மீது எதிரிகள் இருசக்கர
வாகனத்தால் மோதி இறப்பு ஏற்படுத்தியதும், தடுக்க சென்ற அவருடைய தந்தை
தேவராஜை கட்டையால் அடித்து காயம் ஏற்படுத்தியதும் தெரியவருகிறது.
இந்நிலையில் எதிரிகள் கஞ்சா போதையில் கொலை செய்ததாக தவறான செய்தி தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டதாகவும். இது தவறான செய்தி எனவும்
விசாரணையில் எதிரிகள் கஞ்சா மதுபோதையில் இல்லை எனவும்
எஸ்.பி தங்கதுரை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் மது போதையில் இருசக்கர வாகனத்தை ஏற்றி வாலிபர் கொலை செய்த வழக்கில் நான்கு பேர் கைது.

Leave a comment