அரியலூர்,செப்;28
அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த குழுமூர் கிராமத்தில் மேலத்தெருவை சேர்ந்தவர் முத்தலிப்(60). இவர், நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் வீட்டின் முன் பகுதியில் தூங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது, மர்மநபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று, பீரோவில் இருந்த 10 பவுன் நகையை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் செந்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாகவும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.