திருப்பத்தூர்:செப்:13, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குரும்பேரி பகுதியில் பால் வளத்துறை சார்பில் மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று கறவை மாடுகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கால்நடை மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
இம்முகாமில் நூறுக்கும் மேற்பட்ட கறவை மாடுகளை நேரில் பார்வையிட்டு சத்து குறைபாடு உள்ள கறவை மாடுகளுக்கு அளிக்கப்படும் மருந்து குறித்தும் கேட்டறிந்தார்.பின்னர் விவசாயிகளிடம் கறவை மாடுகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு செலவு வங்கி கடன் குறித்து பேசினார். அதனை தொடர்ந்து வெங்களாபுரம் பகுதியில் உள்ள பொது விநியோக நியாய விலை கடையில் ஆவின் பால் விற்பணையினையை தொடங்கி வைத்தார். பின்னர் பால்வளத்துறை அமைச்சர் பேசுகையில் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 38 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் ஆகின்றது. ஒவ்வொரு விவசாயம் கறவை மாடுகளை வைத்து குடும்ப பராமரிப்பு மற்றும் படிப்பு செலவு திருமண செலவு உள்ளிட்ட தேவைக்காக கறவை மாடுகளுடன் வருமானத்தை பெருக்கிக் கொள்கின்றனர். அதுமட்டுமின்றி இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆட்சியில் விவசாயிகளின் நலன் கருதி பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டது பின்னர் நான் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு பகல் விலை மீண்டும் ரூபாய் மூன்று வீழ்த்தப்பட்டது. விவசாயிகளின் நலன் கருதி மீண்டும் கால் அடர்த்தியை கொண்டு பால் விலை உயர்த்தப்பட்டு 35 ஆக வழங்கப்பட்டு வருகிறது விவசாயிகளின் நலன் கருதி கறவை மாடுகளுக்கு பராமரிப்பு செலவு தொகையாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார் பின்னர் விவசாயிகளுக்கு கறவை மாடுகளுக்கு வங்கி கடன் மற்றும் பராமரிப்பு செலவு தொகை உள்ளிட்டவைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. கள ஆய்வினை மேற்கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: திருப்பத்தூர் மாவட்டம் வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கிராமப்புற விவசாயிகள் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய கறவை மாடுகளின் பால் விநியோகம் 16 ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்து வந்தது. ஆனால் இன்றைய ஆட்சியும் நடவடிக்கையால் 35 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது. விவசாயிகளின் நலன் கருதி திராவிட ஆட்சியில் பால் விலை படிப்படியாக உயர்வடைந்து மூன்று ரூபாயிலிருந்து பாலின் அடர்த்தி தரம் குறித்து பால் விலை 10 ரூபாய் விலை உயர்வடைந்து உள்ளது. கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரமாக கறவை மாடுகளுக்கு பராமரிப்பு செலவு தொகை வட்டி இல்லா கடன் வங்கியின் மூலம் வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு மானிய விலையில் கறவை மாடுகள் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகமான விவசாய பெருமக்கள் இருப்பதால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துக் கூறி தேவையான நிதி ஒதுக்கீட்டினை செய்வேன் என்று குறிப்பிட்டார். திருப்பத்தூரை அடுத்து காவேரிப்பட்டு பகுதியில் அமைந்துள்ள பால் வள குளிரூட்டும் நிலையத்தை பார்வையிட்டு அங்குள்ள பணியாளர்களிடம் முறையான பணிகள் நடைபெற்று வருகிறதா என்பதை பற்றி விசாரித்தார். ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு ஆம்பூர் பகுதியில் தொடர்ந்து ஆய்வினை மேற்கொண்டார். இந்த கள ஆய்வு பணியின் போது திருப்பத்தூர் முன்னாள் மாவட்ட பால்வளத்துறை தலைவர், நகர கழக செயலாளர் வழக்கறிஞர் எஸ். ராஜேந்திரன், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வி வில்வநாதன், கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன் மற்றும் பால்வளத்துறை சார்ந்த அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.