நிலக்கோட்டை,செப்.10:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோட்டில் அதிமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் அம்மையநாயக்கனூர் பேரூர் கழக அதிமுகவில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கான உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூர் கழகச் செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார். நிலக்கோட்டை பேரூர் செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார் முன்னால் கவுன்சிலர் கணேசன் வரவேற்றார், நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஒன்றிய செயலாளர் யாகப்பன் 5000-ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கினார்,
மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னால் கூட்டுறவு சங்கத் தலைவர் திருமுருகன் மற்றும் நிர்வாகிகள் அழகப்பன் சேகர் தகவல் தொழி நுட்ப பிரிவு மோகன் உட்பட மாவட்ட ஒன்றிய நகர மற்றும் வார்டு செயலாளர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.