சென்னை, ஆகஸ்ட் – 28 , இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் பிராண்டான சாம்சங் கேலக்சி ஏ55 -5ஜி மற்றும் கேலக்சி ஏ35 -5ஜி ஸ்மார்ட்போன்களில்
இதுவரை கண்டிராத விலையை இப்போது அறிவித்துள்ளது.
தொடக்க விலையான ரூ. 25999 இல் கிடைக்கும்.
முன்னணி வங்கிகளின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் கேலக்சி ஏ55- 5ஜி இல் ரூ.6000 மற்றும் கேலக்சி ஏ35- 5ஜி இல் ரூ.5000 வங்கி கேஷ்பேக் பெறலாம். மேலும் 6 மாதங்கள் வரையிலான இ.எம்.ஐ களையும் பெறலாம்.
மேலும் செயற்கை நுண்ணறிவு அம்சமான கூகிள் உடன் சர்க்கிள் டு சர்ச் உடன் வந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்..
கேலக்சி நுண்ணறிவின் செயல் திறன் மூலம் திரையில் தோன்றும் சர்க்கின் டு சர்ச் ஒரு விரலால் உரையைச் சுற்றி ஒரு வட்டத்தை வரைதல் அல்லது திரையில் உள்ள ஒரு பொருளின் மீது எழுதுதல் மூலம் பயனர்கள் தங்கள் திரையில் எதையும் தேட அனுமதிக்கிறது.
இவற்றின் வடிவமைப்பு மற்றும் ஆயுள்
ஐ.பி.67 என மதிப்பிடப்பட்டுள்ளன, அதாவது 1 மீட்டர் நீரில் 30 நிமிடங்கள் வரை தாங்கும் அளவிற்கு வாட்டர் புருஃப், தூசி மற்றும் மணலை எதிர்க்கும் வகையில் பாதுகாப்பு கட்டமைப்புடன் உள்ளது.
இந்த ஏ 55 – 5ஜி, ஏ 35 – 5 ஜி கேலக்ஸி மாடல் மொபைல் போன்கள் ரூ.25999 தொடக்க விலையாக கிடைக்கும்.