கீழக்கரை ஆகஸ்ட் 23-
கீழக்கரையில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இங்கு 21 வார்டுகளும் நூற்றுக்கும் மேற்பட்ட தெருகளும் உள்ளன மேலும் கீழக்கரையில் பத்துக்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன இங்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கீழக்கரை பகுதியில் சில மாதங்களாக நாய்கள் அதிகரித்து தெருக்களில் கொட்டிக் கிடக்கும் கோழி கழிவுகளை தின்று சில நாய்களுக்கு வெறிபிடித்து ஆடு, கோழி மற்றும் மனிதர்களை துரத்தி கடிக்க ஆரம்பித்துள்ளது இதனால் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு அச்சம் அடைந்து வருகின்றனர்.மேலும் கீழக்கரை நகராட்சி பகுதிகளில் குப்பைத் தொட்டிகளில் குப்பை கொட்டி அதனை வாகன மூலம் அப்புறப்படுத்தி வந்தனர். தற்போது வாகனம் பழுதாகி உள்ளதால் இரண்டு மாதங்களாக குப்பைத் தொட்டிகளை நகராட்சி நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தியதால் ஆங்காங்கே வீதியில் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. தெருக்களில் கிடக்கும் கோழி கழிவுகளை தெரு நாய்கள் தின்று வெறிபிடித்து மனிதர்களை துரத்தி கடிக்க ஆரம்பித்துள்ளது.இதனால் பெற்றோர்கள் தனது குழந்தைகளை பள்ளி மற்றும் அத்தியாவாசியான தேவைகளுக்கு வெளியில் அனுப்புவதற்கு அச்சமடைந்து உள்ளனர்.மேலும் கீழக்கரை பகுதிகளில் பிடிக்கும் நாய்களுக்கு முறையாக கருத்தடை, மற்றும் தடுப்பூசி செலுத்துவது கிடையாது. இதனால் கீழக்கரை நகருக்குள் நாய்கள் குட்டிகள் அதிகரித்து காணப்படுகிறது. கீழக்கரையில் முறையாக கால்நடை மருத்துவர்களை நியமித்து முறையாக கருத்தடை ஊசி செலுத்தி நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் அரசு தலைமை மருத்துவர் பிரியதர்ஷினி கூறியதாவது தற்போது கீழக்கரையில் நாய் மற்றும் எலி கடியினால் மாதம் 60 முதல் 80 நபர்கள் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிறு குழந்தைகள் அதிகம் என்றார்.இதுகுறித்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரகத்துல்லாவிடம் கேட்டபோது. நாய்களைப் பிடிக்கும் போது விலங்குகள் பாதுகாப்பு நபர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாகவும் இதனால் நாய்களைப் பிடிக்க எங்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.