அரியலூர்,ஆக:09
அரியலூர் மாவட்டத்தில் கயர்லாபாத் கிராமத்தில் இயங்கி வரும் அரசு சிமெண்ட் நிறுவனத்தில் புதிய ஆலை சிமெண்ட் லோடிங் பிரிவில் சுமார் 60 பேர் புதிய சிமெண்ட் ஆலை தொடங்கியது முதல் சுமார் 05 ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதாக கூறும் தொழிலாளர்கள் அவர்களுடைய கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தர கோரிக்கை போராட்டம் நடைபெற்றது.
அரசு சிமெண்ட் ஆலை லோடிங் பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்களின் கோரிக்கை விபரம்
1) ஒவ்வொரு 05 மாதத்திற்கு ஒரு முறையும் சிமெண்ட் ஆலை நிர்வாகம் டெண்டரை மாற்றம் செய்யும்போது தொழிலாளர்கள் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரரிடம் சம்பளம் உள்ளிட்ட இதர சலுகைகள் தொடர்பாக முரண்பாடு ஏற்பட்டு அதனை சரி செய்ய மிகுந்த சிரமப்பட வேண்டி உள்ளது. ஆகையால் சிமெண்ட் ஆலை லோடிங் பிரிவில் யார் டெண்டர் எடுத்தாலும் தொழிலாளராகிய எங்களுக்கு பழைய ஆலையில் ஊதியம் வழங்கி வரும் முறையினை பின்பற்றி நியாயமான ஊதியத்தை வழங்கிட வேண்டுகிறோம்.
2) தொழிலாளர்கள் பலமுறை முறையான ஊதியம் அடிப்படை சலுகைகள் குறித்து பலமுறை ஒப்பந்ததாரரிடம் முறையிட்டும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை இதனால் வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆகவே எங்களுடைய அடிப்படை வசதிகளையும் ஊதியத்தை முறைப்படுத்தி நிர்வாகத்தின் மூலமாக ஊதியம் கிடைக்க நடக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
3) ஒவ்வொரு டெண்டர் வழங்கப்படும் போது ஒப்பந்ததாரர் அவரது சுய லாபத்தை மட்டும் கணக்கில் கொண்டு குறைவான தொகையினை டெண்டரில் குறிப்பிட்டு டெண்டர் எடுத்த பின்னர் தொழிலாளர்களுக்கு வழங்கி வரும் ஊதியத்தை குறைத்து வழங்குகின்றனர். இதனை தடுத்து சிமெண்ட் ஆலை நிர்வாகமே தொழிலாளர்களுக்கு லோடிங் செய்யப்படும் டன் அடிப்படையில் ஊதியம் நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
4) தற்பொழுது வழங்கியுள்ள ஒப்பந்தத்தால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலையுள்ளதால் தற்பொழுது வழங்கியுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்து எங்களது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு எங்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய ஒப்பந்தம் வழங்கிட வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
5) கடந்த 05 மாதங்களாக தொழிலாளர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பணி வழங்கி வருகின்றனர். தொழிலாளர்களாகிய எங்களுக்கு அதிக நாட்கள் பனி கிடைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து நேற்று லோடிங் பிரிவு முன்பு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் செய்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.