தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சாலைகளை நிரந்தர சீரமைப்புக்காக பாலங்கள் மற்றும் தடுப்பு சுவர்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விளாத்திகுளம் உட்கோட்டத்தில் சுமார் ரூ390 லட்சம் மதிப்பீட்டில் உச்சநத்தம் முதல் சூரங்குடி சாலையில் 950 மீட்டர் நீளத்துக்கு தடுப்பு சுவர் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இப் பணிகளை தூத்துக்குடி மாவட்ட கோட்ட பொறியாளர் ஆறுமுக நயினார், விளாத்திகுளம் உதவி கோட்ட பொறியாளர் ராஜபாண்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.உடன் இளநிலை பொறியாளர் சார்லஸ் பிரேம்குமார் உடன் இருந்தனர்.



