மதுரை ஜூலை 28,
மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காஞ்சரம்பேட்டை ஜி.டி.பேலஸ் மஹாலில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் அரசு துறைகள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் முகாமை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பொதுமக்கள் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு அதற்கான ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் காஞ்சரம்பேட்டை ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்த மாற்றுத்திறன் கொண்ட பயனாளிடம் காணொளி காட்சி வாயிலாக நேரடியாக உரையாடினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மதுரை வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.கே.அர்விந்த்
ஆகியோர் உடன் உள்ளனர்.