திருப்பத்தூர்:ஜூலை:27, திருப்பத்தூர் அடுத்த சி.கே ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப் பிரிவுவு இணைந்து சித்த மருத்துவ முகாமினை நடத்தினர்.
சித்த மருத்துவ முகாமில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பழனி, ஆண்டியப்பனூர் வட்டார மருத்துவ அலுவலர் சௌந்தர்யா, அரசு சித்த மருத்துவர் விக்ரம் குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் முதியோர் இளைஞர்கள் என பலரும் பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனையின் படி மருந்துகளை வாங்கிச் சென்றனர்.
வயதான முதியோர்கள் பலரும் கலந்து கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கான இயற்கையான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுச் சென்றனர். இந்நிகழ்வில் சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து மருத்துவ முகாமினை திறந்து வைத்த மருத்துவர்கள் சித்த மருத்துவத்தை விளக்கினர். முகாமிற்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட தலைவர் கிஷோர் பிரசாத் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்று வாழ்த்தி பேசினார். இந்நிகழ்வில் துணைத் தலைவர் சத்தியமூர்த்தி, செயலாளர் பரணி, பொருளாளர் பாண்டியன், மாநில உறுப்பினர் முருகன், ஏ.கே. மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலு, திருமாவிமல், கிருஷ்ணகிரி ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளர் ரஜினி என பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.