பரமக்குடி ஜூலை. 25 : பரமக்குடி நகர் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக எம்எல்ஏ முருகேசன் தெரிவித்துள்ளார்.
பரமக்குடியில் வியாபாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ராசி என் போஸ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர்கள் லெனின் குமார் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், தெருவிளக்கு சாலைகள் அமைப்பதற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், பரமக்குடி நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும், வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதே தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகை ஆற்றின் ஓரத்தில் உள்ள சர்வின் சாலையில் உள்ள மேடு பள்ளங்களை சரி செய்ய வேண்டும். சாலைகளில் விபத்துக்களை ஏற்படுத்தும் நாய்கள் மற்றும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும். வைகை ஆற்றுக்குள் ஆக்கிரமித்துள்ள நாவல்கள் மற்றும் கருவேல் மரங்களை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் பொதுக்குழுவில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. இதில் பேசிய பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் ” தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் கட்டுமானம் முடிந்துள்ள கட்டிடங்களுக்கு மின் இணைப்பு மாற்றுவதற்கான தடையில்லா சான்றிதழ்களை நகராட்சி மூலம் வழங்கலாம் என உத்தரவிட்டுள்ளார். வியாபாரிகளில் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. நகராட்சி சார்பாக பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், த தெருவிளக்கு மற்றும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. வருடம் தோறும் சித்திரை திருவிழாவிற்காக வைகை ஆற்றுப்பகுதியில் உள்ள நாணல் மற்றும் கருவேலன் நிலங்கள் அகற்றப்பட்டாலும், மீண்டும் திரும்ப வருகிறது. இதனை, நிரந்தரமாக அகற்றுவதற்கு பொதுப்பணித்துறையினர் சிறப்பு திட்டம் வகுத்துள்ளனர். அதை துறையின் அமைச்சருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும். வைகை ஆற்றின் இருபுறங்களிலும் கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இறுதியில், இணைச்செயலாளர் ஜெயம் அந்துவான் நன்றி கூறினார்.
பட விளக்கம்
பரமக்குடியில் நடைபெற்ற வியாபாரிகள் சங்க பொதுக்குழுவில் எம்எல்ஏ முருகேஷ் சிவன் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.



