கன்னியாகுமரி,ஜூலை.18-
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் விஜயன் விடுத்துள்ள செய்தி குறிப்பு;
தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் தொழில் முனைவோரின் வாழ்வாதாரம் அடியோடு முடங்கும் நிலை ஏற்படும்.
குமரி மாவட்டம் சுற்றுலா தொழிலை நம்பியுள்ளது.உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் 100-க்கும் தனியார் லாட்ஜ்கள், ஹோட்டல்கள் உள்ளது.தொடர் மின்கட்டண உயர்வால் நேரடியாக லாட்ஜ்,ஹோட்டல் தொழில் பாதிகப்படும்.மறைமுகமாக அங்கு பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.
அதேபோல்,உயர்வால் மின்கட்டண உயர்வால் மற்ற மாநில ஜவுளி தொழில் துறையினருடன் தமிழக ஜவுளித்துறையினர் போட்டி போட முடியாத சூழல் ஏற்படும்.பெரும்பாலான தொழில்முனைவோர், தொழிலை விட்டு வெளியேற வேண்டிய மோசமான சூழல் ஏற்பட்டுவதுடன்,சிறுகுறு தொழிற்சாலைகள் நடத்தி வருபவர்கள் கடனில் தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
அதேபோல் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும்.பிற மாநிலங்களில் ஏராளமான சலுகைகளை, தொழில்துறையினருக்கு வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில், மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தொழில்துறையில் தமிழகம் முன்னேறற்ற பாதையில் செல்வதை மின்கட்டண உயர்வு தடுத்து நிறுத்தும்.தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, மின்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.