கன்னியாகுமரி ஜூலை 17
கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ. 11 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் ஒற்றையால்விளையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டடத்தை விஜய் வசந்த் எம்.பி., திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தார். பேரூராட்சி 5ஆவது வார்டு கவுன்சிலர் சுஜா அன்பழகன், ஒற்றையால்விளை ஊர்த்தலைவர் ஆர்.பாலசுந்தரம், முன்னாள் மாணவர் பேரவை தலைவர் எஸ்.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இதில், அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சாம்சுரேஷ்குமார், திமுக நிர்வாகிகள் ஆர்.டி.ராஜா, எம்.ஹெச்.நிசார், ஐ.நாகராஜன், மணிராஜா, முன்னாள் கவுன்சிலர் டி.தாமஸ், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆனிரோஸ் தாமஸ், ஆட்லின் சேகர், கொட்டாரம் நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.செந்தில்குமார், காங்கிரஸ் நிராவாகிகள் ஜவஹர், சந்தியா ராயப்பன், கிங்ஸ்லி, பேரூராட்சி சுகாதார அலுவலர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.