மதுரை ஜூலை 14,
மதுரை ஆவினில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மதுரையில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை ஆவின் பொது மேலாளர் சிவகாமி மதுரை மாவட்ட துணை பதிவாளர் (பால்வளம்) செல்வம் ஆகியோரை அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்து ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் பால் உற்பத்தியாளர்களின் மேம்பாடு ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்து தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆலோசனை வழங்கினார்