By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செந்துறையில் “மக்களுடன் முதல்வர்” திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > செந்துறையில் “மக்களுடன் முதல்வர்” திட்டம்
அரியலூர்மாவட்டம்

செந்துறையில் “மக்களுடன் முதல்வர்” திட்டம்

Last updated: July 12, 2024 3:37 pm
July 12, 2024
104 Views
Share
SHARE

அரியலூர், ஜூலை:12

 

அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை பெரியார் நினைவு சமத்துவபுரம் சமுதாயகூடத்தில் ஊரகப்பகுதிகளில் மக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்  நேற்று துவக்கி வைத்து, பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலையில் நடைபெற்றது.

 

தமிழ்நாடு முதலமைச்சர்  அரசின் சேவைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அவற்றின் நீட்சியாக அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைபடுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்றுசேரும் வண்ணம் ஊரக பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர்  தருமபுரி மாவட்டத்தில் இன்றையதினம் தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

 

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஊரகப் பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் அரியலூர் மாவட்டம், செந்துறை பெரியார் நினைவு சமத்துவபுரம் சமுதாயகூடத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் நேற்றையதினம் துவக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டதுடன் அவற்றின் மீது உடனடி நடவடிக்கையாக 10 பயனாளிகளுக்கு வருவாய்த் துறையின் மூலாமக பட்டா மாறுதல் ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ஊன்றுகோலும், வேளாண்மைத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு மானியத்துடன் பசுந்தாள் விதையினையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு பயிர் கடனுதவியாக ஒரு இலட்சம் தொகைக்காக வரவு வைக்கப்பட்ட வங்கி புத்தகத்தினையும் பயனாளிகளுக்கு வழங்கினார். நேற்றைய முகாமில் அரியலூர் மாவட்டத்தில் 1748 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

 

இம்முகாம்களில் பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்களும் 30 தினங்களுக்குள் சம்மந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் வழங்க வேண்டும்  என  போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்  அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

 

மேலும் அரியலூர் மாவட்டத்தில் இத்திட்டம் ஏற்கனவே முதல்கட்டமாக அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகளிலும், உடையார்பாளையம் மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளிலும் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

 

இதன் தொடர்ச்சியாக அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 16.07.2024 நாளன்று தாமரைக்குளம் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 18.07.2024 நாளன்று ரெட்டிப்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 23.07.2024 நாளன்று கடுகூர் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 25.07.2024 நாளன்று சுண்டக்குடி பஞ்சாயத்து அலுவலகத்திலும், 26.07.2024 நாளன்று வாலாஜநகரம் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 30.07.2024 நாளன்று மேலக்கருப்பூர் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 31.07.2024 நாளன்று சுப்புராயப்புரம் பஞ்சாயத்து அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.

 

திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் 16.07.2024 நாளன்று தூத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 18.07.2024 நாளன்று திருமழாபாடி பஞ்சாயத்து அலுவலகத்திலும், 23.07.2024 நாளன்று கீழக்கொளத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 25.07.2024 நாளன்று திருமானூர் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 26.07.2024 நாளன்று வெங்கனூர் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 30.07.2024 நாளன்று பூண்டி பஞ்சாயத்து அலுவலகத்திலும், 31.07.2024 நாளன்று ஏலாக்குறிச்சி பஞ்சாயத்து அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.

 

செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் 16.07.2024 நாளன்று குமிழியம் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 18.07.2024 நாளன்று இரும்புலிக்குறிச்சி பஞ்சாயத்து அலுவலகத்திலும், 23.07.2024 நாளன்று சிறுகளத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 25.07.2024 நாளன்று அசாவீரன்குடிக்காடு கிராம சேவை மையத்திலும், 26.07.2024 நாளன்று நமங்குணம் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 30.07.2024 நாளன்று தளவாய் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 31.07.2024 நாளன்று சன்னாசிநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.

 

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் 16.07.2024 நாளன்று கங்கைகொண்டசோழபுரம் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 18.07.2024 நாளன்று குருவாலப்பர்கோயில் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 23.07.2024 நாளன்று கல்லாத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 25.07.2024 நாளன்று தத்தனூர் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 26.07.2024 நாளன்று அங்கராயநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 30.07.2024 நாளன்று இறவாங்குடி பஞ்சாயத்து அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.

 

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் 16.07.2024 நாளன்று ஆண்டிமடம் இ-சேவை மையத்திலும் 18.07.2024 நாளன்று கூவத்தூர் இ-சேவை மையத்திலும், 23.07.2024 நாளன்று விளந்தை  இ-சேவை மையத்திலும், 25.07.2024 நாளன்று திருக்களப்பூர் இ-சேவை மையத்திலும், 26.07.2024 நாளன்று அழகாபுரம் இ-சேவை மையத்திலும், 30.07.2024 நாளன்று பெரியாத்துக்குறிச்சி பஞ்சாயத்து அலுவலகத்திலும், 31.07.2024 நாளன்று குவாகம் இ-சேவை மையத்திலும் நடைபெற உள்ளது.

 

தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் 16.07.2024 நாளன்று ஸ்ரீபுரந்தான் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 18.07.2024 நாளன்று அம்பாபூர் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 23.07.2024 நாளன்று நடுவலூர் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 25.07.2024 நாளன்று இருகையூர் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 26.07.2024 நாளன்று சோழமாதேவி பஞ்சாயத்து அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.

 

மேற்கண்ட பட்டியலில் உள்ள நாட்களில் ஊராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்கள் இச்சிறப்பு முகாமில் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான தேவையான ஆவணங்களுடன் 15 அரசு துறைகளைச் சேர்ந்த 44 சேவைகளை பெற மனு அளித்து பயன்பெறலாம். 

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

நிகழாண்டில் 3,600 பேரருக்கு கலைஞரின் கனவு
குமரி கடல் பகுதியில் 2.7 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு
ஈரோட்டில் அனுமதி இல்லாமல் செயல்படும் முதியோர் இல்லம் மீது நடவடிக்கை
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவிடத்தில் 94 வது பிறந்த நாள் விழா; மாவட்ட ஆட்சித் தலைவர் மலர் தூவி மரியாதை
கிராம சபை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

10 நபர்களுக்கு இலவச செயற்கை கால்களை வழங்கினர்

June 29, 2024
69 Views
கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா
சமத்துவ நாள் 23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
ஸ்ரீ.மீனாட்சி அரசினர் கலைக்கல்லூரி கூட்டரங்கில்
எஃ ஐ ஐ டி ஜே இஇ ( ஃபிட் ஜீ ) தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account