அரியலூர், ஜூலை:05
2024- ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி சேர்க்கை (Spot Admission) நடைபெறுகிறது. பயிற்சியில் சேர விரும்புபவர் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும். ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் முதலில் வருபவருக்கு முன்னிரிமை அடிப்படையில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி. விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்ப கட்டணத் தொகை – ரூ.50/-, சேர்க்கை கட்டணம்: ஒரு வருடம் தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் – ரூ.185/-, இரண்டு வருடம் தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் – ரூ.195/-. இணையதளம் வாயிலாக நேரடி சேர்க்கை (Spot Admission) – 01.07.2024 முதல் 15.07.2024 வரை நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு 1.அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரியலூர் – 9499055877, 04329-228408 2.அரசு தொழிற் பயிற்சி நிலையம், ஆண்டிமடம் – 9499055879 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்