கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக கழக தலைமை செயற்குழு உறுப்பினர டி.ஆர்.சண்முகசுந்தரம்* , மற்றும் காரமடை நகர திமுக கழக செயலாளர் இரா.வெங்கடேஷ், ஆகியோர் ஆலோசனைப்படி நேற்று காரமடை நகராட்சிக்குட்பட்ட 15 ஆவது வார்டு மங்கலக்கரை புதூர், 17-வது வார்டு சாஸ்திரி நகர், அம்பேத்கர் நகர்,6-வது வார்டு குட்டையூர் பாவேந்தர் நகர், 13 வது வார்டு ஜே.ஜே. நகர், மற்றும் திம்மம்பாளையம் ஆகிய பகுதிகளில் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இந்த பொது மக்களின் எதிர்கால குடும்ப நலனை கருத்தில் கொண்டு ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டி அருந்ததியர் சமுதாய பொதுமக்கள் சுமார் 350 நபர்கள் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு. கிராந்தி குமார் பாடி அவர்களிடம் மனு அளித்தனர். இந்நிகழ்வில் கோவை வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு முன்னாள் துணை அமைப்பாளர் எம்.கே.புதூர் ரமேஷ் குமார், காரமடை இளைஞரணி துணை அமைப்பாளர் வி.ஆர்.பத்ரி, மங்களக்கரை புதூர் 15-வார்டு துணை செயலாளர்கள் ருக்குமணி, சரளா தேவி, பூத் கமிட்டி உறுப்பினர் ரவி, இளைஞர் அணி அருள்குமார், சுபாஷ், குட்டையூர் பாவேந்தர் நகர் வினோத், சித்ரா ஆகியோர் உடன் இருந்தனர்



