அரியலூர் மாவட்டம்,செந்துறை அருகே பிலாக்குறிச்சி கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி பாமக -வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வன்னியர் சங்க மாநில நிரந்தர தலைவருமான ஜெ.குரு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு 24 -ம் ஆண்டு கபடி திருவிழா பிகே ஸ்போர்ட்ஸ் மற்றும் அரியலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் சார்பில் நடைபெற்றது.

இதில் பாமக மாவட்ட கவுன்சிலர் வசந்தமணி செல்ல ரவி , செந்துறை பாஜக ஒன்றிய பொதுச் செயலாளர் சிவசங்கர் ஆகியோர் தலைமை வகித்து போட்டியை துவக்கி வைத்தார்கள் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கபடி போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 50 – க்கும் மேற்பட்ட ஆண்,பெண் தனி தனி அணிகள் கலந்து கொள்கின்றன போட்டியின் முதல் நாளான நேற்று மகளிருக்கான கபடி போட்டி நடைபெற்றது. முன்னதாக அக்கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் இருந்து கபடி வீரர்- வீராங்கனைகளை மேளதாளங்களுடன் ஊர்வலமாக விளையாட்டு திடலுக்கு அழைத்து வரப்பட்டனர். இதனை தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் மாவட்ட தலைவர் சின்னமணி தொடங்கி வைத்தார். இதில் தமிழ்த்தென்றல், கல்பனாதேவி, ரேவதி, சிவசங்கரி விழா ஒருங்கிணைப்பாளர் மணி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்