தருமபுரி, அக் : 15 ,
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அமைச்சர் ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் சரவணன், பென்னாகரம் எம்எல்ஏ கஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சமுதாய வளைகாப்பு விழாவில் 100 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, 21 புதிய நகரப் பேருந்துகளின் சேவை தொடங்கி வைக்கப்பட்டதுடன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரங்களும் வழங்கப்பட்டன.



