திண்டுக்கல், செப். 28:
திண்டுக்கல் மாவட்ட யோகா சாம்பியன்ஷிப் போட்டி 2026, சப்-கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள பிச்சாண்டி மகாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராமபிரபா கலைக் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் தலைமை தாங்கினார். இளைஞர் விளையாட்டு டெவலப்மெண்ட் பெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு அமைப்பின் பொதுச் செயலாளர் கோபி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். டிராகன் தற்காப்புக் கலை அகாடமி நிறுவனச் செயலாளர் அசோக்குமார் வரவேற்புரையாற்றினார்.
தொடர்ந்து மார்ஷியல் ஆர்ட்ஸ் கிளப் சையது இப்ராம்ஷா, யோகா தெரபிஸ்ட் சந்திரகலா மற்றும் ஜெய் சன் ஸ்பார்க் அகாடமி பிரித்விராஜ் ஆகியோர் இணைந்து போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது யோகா திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் திருச்சி சாலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வாணி வித்யாலயா பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் (Overall Champion) பட்டத்துடன் முதல் பரிசை வென்றது. YMR பட்டியில் செயல்பட்டு வரும் சகாய மாதா மெட்ரிகுலேஷன் பள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சாய் யோகா அகாடமி தலைவர் முத்துலட்சுமி மற்றும் செயலாளர் பாக்கியலட்சுமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துப் பாராட்டினர். தொடர்ந்து டிராகன் தற்காப்புக் கலை அகாடமி பாலாஜி நன்றி உரையாற்றினார். மாணவர்களின் பெற்றோர், போட்டி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பாராட்டு தெரிவித்தனர்.



