ஈரோடு, ஆக. 6 –
கீழ்பவானி பாசனப் பகுதிகளுக்கு உடனடியாக தண்ணீர் திறந்து பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, கீழ்பவானி பாசனத் திட்டத்தின் மூலம் சுமார் 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருவதாகவும், தற்போதுள்ள நீர் இருப்பை கருத்தில் கொண்டு தாமதமின்றி பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், குறுவை மற்றும் சம்பா சாகுபடிகள் பாதிக்கப்படாமல் இருக்க திட்டமிட்ட முறையில் நீர் திறந்துவிட வேண்டும் என்றும், இதுதொடர்பாக துண்டுப் பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடமும் விவசாயிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இறுதியாக, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உடனடியாக கீழ்பவானி பாசனத்திற்கு நீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர்.



