நாகர்கோவில், ஜூலை 24 –
கல்குளம் வட்டம், வெள்ளிச்சந்தை “அ” வருவாய் கிராமத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களின் மக்கள் தொடர்பு முகாமிற்கான முன்னோடி மனுக்கள் பெறும் நிகழ்ச்சி வருகின்ற 29.07.2026 (புதன்) அன்று வெள்ளிச்சந்தை, ஸ்ரீ பத்மநாபா திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் 13.08.2026 (வியாழன்) அன்று மேற்படி திருமணமண்டபத்தில் வைத்து நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரால் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை முன்னோடி மனுக்கள் பெறப்பட உள்ளது.
எனவே வெள்ளிச்சந்தை “அ” வருவாய் கிராமத்திற்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கேட்டுக் கொண்டுள்ளார்.


