By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் மாவட்ட நிர்வாகம், போலீஸ் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: கலெக்டர், எஸ்பி பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் மாவட்ட நிர்வாகம், போலீஸ் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: கலெக்டர், எஸ்பி பங்கேற்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் மாவட்ட நிர்வாகம், போலீஸ் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: கலெக்டர், எஸ்பி பங்கேற்பு

Last updated: June 23, 2026 7:08 pm
June 23, 2026
5 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 23 –

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் சார்பில் ‘மாற்றம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், முன்னிலை வகித்தார்.

கலெக்டர் குத்துவிளக்கேற்றி, போதைப்பொருள் எதிர்ப்பு லோகோவினை அறிமுகப்படுத்தி, பள்ளி மாணவ மாணவியர்களிடையே பேசியதாவது: குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில், இளைஞர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாற்றம் என்னும் உன்னதமான புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா மற்றும் விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது.

நம்முடைய மாவட்டமானது கல்வியில் சிறந்து விளங்கி, பல அறிவார்ந்த ஆளுமைகளை உருவாக்கிய பெருமைக்குரிய மாவட்டமாகும். இத்தகைய சிறப்புமிக்க மாவட்டத்தில், போதைப்பொருள் என்ற சிறிய கரும்புள்ளியால் இளைஞர்களின் முன்னேற்றமும், மாற்றமும் தடைபட்டுவிடக் கூடாது என்ற உயரிய நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனையின் படி, இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படவுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஆர்.ஸ்டாலின் பேசுகையில்: போதைப் பழக்கம் முதலில் ஒழுக்கமின்மையை ஏற்படுத்தும். பின்னர் உங்கள் கல்வி திறனை பாதித்து இறுதியில் குடும்பத்தின் நம்பிக்கையை இழக்க வைத்து விடும். மாணவர்கள் தான் அந்த குடும்பத்தின் கலங்கரை விளக்கம். போதைக்கு அடிமையாகி விடுவதால் பெற்றோர்களின் கனவை சிதைத்து விடுகிறார்கள். மாணவர்களாகிய உங்களுடைய மனம் தடுமாறி விடாமல் நல்வழியில் சிந்தனையுடன் செல்ல வேண்டும். போதை பழக்கத்திற்கு எந்த விதத்திலும் அடிமையாகி விடக் கூடாது. அவ்வாறு அடிமையாகி விட்டவர்களை மீட்க காவல்துறையால் மட்டும் முடியாது. அனைவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த மாற்றம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசினார்.

தொடர்ந்து மாவட்ட காவல்துறையினரால் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பார்வையிட்டார்கள். இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆரோக்கிய பிரின்ஸ் ராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.நமச்சிவாயம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சகிலாபானு, துறை அலுவலர்கள், காவல்துறையினர், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் கேரள முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
தேர்தல் விழிப்புணர்வு பேரணி – விழிப்புணர்வு வாகனம்: ஈரோடு ஆட்சியர் துவக்கி வைத்தார்
குப்பை கொட்டியதாக ரூபாய் 4500 அபராதம்
தாணுமாலய சுவாமி கோவில் மார்கழிப் பெருந்திருவிழா; தற்கால கடைகள் நடத்துவதற்கான ஏலம்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பறக்கை அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

August 20, 2025
45 Views
மாபெரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
குறுஞ்செய்தி சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்யக்கூடாது
தேனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சீரமைப்புப் பணிகள்: மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
திமுக சார்பில் வாகனம் மூலம் நீர், மோர் , ஜுஸ், பழங்கள் வழங்குவதற்கான துவக்க நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account