தஞ்சாவூர், ஜூன் 16 –
தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 96 மாணவ மாணவிகளுக்கு 11ம் வகுப்பு சேர்க்கை ஆணையை கலெக்டர் ரேவதி வழங்கினார். 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் பயின்று தஞ்சாவூர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த 48 மாணவர்கள் மற்றும் 48 மாணவிகள் என 96 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு இந்தியாவில் உள்ள சிறந்த கல்லூரிகளில் மேற்படிப்பு படிக்கும் வகையில் நடத்தப்படும் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிறந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் பேரூராட்சி அரசு மாதிரி பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சேர்க்கைக்கான ஆணைகளை கலெக்டர் ரேவதி வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: கல்வி மூலம் மாணவர்கள் தாங் கள் காணும் கனவினை அடைய முடியும் பெற்றோர்கள் உங்களது கனவுகளை நினைவாக்கும் இடத் தில் உங்களது பிள்ளைகள் தற் போது உள்ளனர். எனவே மாணவர் கள் தங்களது படிப்பின் மீது மிகுந்த அக்கறை கொண்டு படிக்க வேண் டும் .உங்கள் நோக்கத்தை நீங்கள் உறுதியாகக் கொண்டிருந்தால் அந்த இடத்தில் அந்த நோக்கம் உங்களை கொண்டு செல்லும்.
மாணவர்கள் அனைவரும் தங்க ளது எதிர்காலத்தை நினைவில் கொண்டு மாணவப் பருவத்தில் தங்களது செயல்பாடுகளை மேம் படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் எதிர்காலம் நமது கனவினை உறுதி செய்யும். படிக் கும் காலத்தில் எத்தகைய கஷ்டம் இருந்தாலும் அதை நாம் ஏற்றுக் கொண்டு நமது படிப்பில் முழு ஈடு பாடு காட்ட வேண்டும்.
மாணவ மாணவிகள் தங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்ற அடிப்படையில் எதை நோக்கி நீங்கள் பயணம் செய்கிறீர்களோ அதற்கான முயற்சி சரியாக இருக்கும் பட்சத் தில் அது உங்கள் உங்களை நோக்கி பயணம் செய்யும். எனவே மாணவ மாணவிகள் அனைவரும் தாங்கள் தேர்ந்தெடுத்த நோக்கத் திற்காக சிறந்த முறையில் படித்து அந்த நோக்கத்தினை நிறைவு செய்ய வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பேபி, அரசு மாதிரி மாநில ஒருங்கிணை ப்பாளர் ராஜபாண்டியன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



