தென்காசி, மே 28 –
தென்காசியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் தென்காசி மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் ராஜ பிரகாஷ் தலைமையில், தென்காசி நகர செயலாளர் சங்கர பாண்டியன் முன்னிலையில் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் முன்பு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவா, மாவட்ட பொருளாளர் மாரியப்பன், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் ஜூடு, தென்காசி நகர நிர்வாகிகள் நகர இளைஞரணி அமைப்பாளர் அன்பு பாலா, சுப்பிரமணியன், நாகராஜன், வினோத், சந்துரு, சுதன், கார்த்திக், மாரி, முத்துக்குமார், குணா, வெங்கடேஷ், ராஜேஷ்வரன், உதயகுமார், கோபி, சிவசித்தாராமன், சுந்தர், கோகுல், பாலசுப்பிரமணியன், மாவட்ட மாணவரணி இணை அமைப்பாளர் ராக்லேட், மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் சுரேஷ் மணி, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கர சுப்பிரமணியன் செய்தார் மற்றும் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



