கோவை ஜூன்:11
தமிழகம் – புதுவையில் 40 க்கு 40 வெற்றியை அடுத்து பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா மகத்தான வெற்றிக்கு காரணமான திமுக தலைவருக்கு நின்றி தெரிவிக்கும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் 15 ந்தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டி பணிகளை அமைச்சர் சு.முத்துச்சாமி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்
திமுக தலைவர் தளபதி அவர்கள் பெரும் முயற்சி காரணமாக இந்தியா முழுவதும் அருமையான கூட்டணி அமைக்கப்பட்டது.
பாஜக மத்தியில் தன்னிச்சையாக செயல்பட முடியாமல் உள்ளனர் .
அவர்கள் இந்திய கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனைகளை கண்டிப்பாக கேட்டே ஆக வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய கூட்டணி அமைவதற்கு முதல்வர் அவர்கள் தான் காரணம். தமிழ்நாட்டில் 40 இடங்களையும் பாண்டிச்சேரி சேர்த்து திமுக கூட்டணி வெற்றி பெறும் என முதல்வர் கூறினார். மக்களுடைய பணிகளை நாங்கள் செய்துள்ளோம். அந்த நம்பிக்கையில் இந்த வாக்குறுதிகளை கொடுக்கிறேன் என முதல்வர் தெரிவித்தார்.
வட மாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது நம்முடைய தமிழ்நாட்டில் வலுவாக இருந்தும் எந்தவிதமான சின்ன அசம்பாவிதம் கூட இல்லாமல் இந்த தேர்தலில் நடத்தி முடித்துள்ளோம். மக்கள் மிகப் பெருவாரியான வாக்குகள் கொடுத்துள்ளார்கள்.
திமுகவைச் சார்ந்த அடிமட்ட எந்த பதவியும் இல்லாமல் கழகத் தோழர்கள் சகோதரிகள் பொறுப்புகளில் உள்ள நண்பர்கள் அத்தனை பேரும் கடுமையாக உழைத்து ஓய்வில்லாமல் உழைத்த உழைப்பு தான் இன்றைக்கு மாபெரும் வெற்றி நமக்கு கொடுத்துள்ளார்கள். தலைவர் அவர்கள் தளபதி அவர்கள் பெற்று பயணம் மேற்கொண்டு பிரச்சாரங்கள் செய்து அதே போல அவர் போக முடியாத இடத்திற்கு இளைஞர் அணி செயலாளர் உதயநிதி அவர்கள் துரைமுருகன் அவர்கள் மற்ற கட்சி தலைவர்கள் பல பேர் அந்த இடங்களில் சென்று பிரச்சாரம் செய்தார்கள்.
அதற்கு காரணம் மேற்கு மண்டலம் பலபேர் பேசியிருந்தார்கள் இன்று மேற்கு மண்டலம் மொத்தமாக திமுக கையில் இருக்கிறது . மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற கடமையோடு சட்டமன்றத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் சின்ன சரிவு ஏற்பட்டாலும் கூட முதல் கூட்டத்தை கோவையில் போட்டார்கள்
அப்படிப்பட்ட தலைவர் அவர்கள் கோவை மாவட்டத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமாக இந்த முப்பெரும் விழா அமைந்துள்ளது.
முன்னதாக இந்த நிகழ்வின்போது கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி திமுக மாநில மாநில சட்டத்துறை இணைச்செயலாளர்கள் வழக்கறிஞர் கே எம் தண்டபாணி வழக்கறிஞர் அருள்மொழி மேயர் கல்பனா ஆனந்தகுமார் துணைமேயர் வெற்றிச்செல்வன் மாநகராட்சி மண்டல தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தெய்வானை தமிழ்மறை தலைமை செயற்குழு உறுப்பினர் தணிக்கை இராஜேந்திரன்
மாவட்ட நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்