திருச்சி, ஏப். 24 –
திருச்சி கிழக்கு தொகுதியில் மதுரம் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்ட பிறகு, அவை ஸ்ட்ராங் ரூமிற்கு கொண்டு செல்ல இரவு 1 மணி வரை தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த த. வெ. க நிர்வாகிகள் சிலர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரியிடம் கள்ள ஓட்டு போடப்படுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் விளக்கமளித்த பிறகு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமிற்கு கொண்டு செல்லப்பட்டன. இதனால், இங்கு கள்ள ஓட்டு போடப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.



