By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சூழ்ச்சிகளை வீழ்த்துவதற்கு பெரியார் தேவைப்படுகிறார்: திமுக துணை பொது செயலாளர் ஆ. இராசா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > சூழ்ச்சிகளை வீழ்த்துவதற்கு பெரியார் தேவைப்படுகிறார்: திமுக துணை பொது செயலாளர் ஆ. இராசா
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

சூழ்ச்சிகளை வீழ்த்துவதற்கு பெரியார் தேவைப்படுகிறார்: திமுக துணை பொது செயலாளர் ஆ. இராசா

Last updated: February 23, 2026 7:32 pm
February 23, 2026
42 Views
Share
SHARE

தஞ்சாவூர், பிப்ரவரி 23 –

அடக்குமுறை வடிவங்கள் மாறி வரும் நிலையில், சூழ்ச்சிகளை வீழ்த்துவதற்கு பொரியார் தேவைப்படுகிறார் என்றார் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான ஆர். இராசா.

தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது: நம் கவனத்தை திசை திருப்புவதற்காக பெரியார் ஒன்றும் செய்யவில்லை எனக் கூறி வருகின்றனர். பெரியாரை யாரும் இழிவு படுத்த முடியாது. சுருக்கி விட முடியாது. இந்த மண்ணில் இந்துத்துவாதிகளால் கட்டத்திற்குள் அடக்க முடியாத ஒரு நெருப்பு பெரியார் தான். அவருடைய தத்துவம் நூறு ஆண்டுகளைக் கடந்தும் வாழ்கிறது
இப்போதுள்ள இளைஞர்களுக்கு பழைய வரலாறு தெரியவில்லை. அதை படிக்கவும் இல்லை.

இப்போது ஜாதி இல்லை, தமிழ் மொழிக்கு ஆபத்தில்லை என கூறுகின்றனர். ஆனால், இப்போது வடிவங்கள் மாறி இருப்பதை இளைஞர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். திராவிடர் நாடு பிரிவினை கேட்ட பெரியார். தமிழ்நாடு தமிழருக்கே சொந்தம் எனக் கூறினார். அந்த முழக்கம் இப்போது மாநில சுயாட்சியாக மாறி இருக்கிறது. ஆனால் நாடாளுமன்றத்தில் கூட திமுக பிரிவினை பேசுகிறது எனக் கூறுகின்றனர்.

நீலகிரி தொகுதிக்கு வந்த பாஜக முன்னாள் தலைவர் நட்டா, நாங்கள் எவ்வளவோ செய்து பார்க்கிறோம் தமிழ்நாடுதனியாகவே இருக்கிறது என பேசினார். இதுவரை தமிழ் நாட்டை நாங்கள் பிரிப்பதாக கூறியவர்கள், இப்போது அவர்களே தமிழ்நாடு தனியாக இருக்கிறது என கூறுகின்றனர்.

பெரியாரின் தத்துவத்தை திமுக தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. அதற்கு வற்றாத ஜீவ ஊற்றாக தாய் கழகம் இன்னும் எங்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அப்போது இருந்த அடக்குமுறை வடிவங்கள் இப்போது வேறு, வேறு முறையில் வருகிறது. அந்த சூழ்ச்சிகளை எல்லாம் வீழ்த்துவதற்கு பெரியார் இன்றைக்கும் தேவைப்படுகிறார். எந்த வடிவத்தில் அடக்குமுறை இருக்கிறதோ, அந்த வடிவத்துக்கெல்லாம் பெரியார் தேவைப்படுவார் என்றார் இராசா.

மாநாட்டில் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றி பெற எல்லா வகையிலும் திராவிட கழகம் பாடுபடும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிறைவு உரையாற்றினார்

மாநாட்டிற்கு திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் செந்தூர பாண்டியன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் முரசொலி, திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், சட்டப் பேரவை உறுப்பினர் துரை சந்திர சேகரன், முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், மேயர் சண். ராம நாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக தலைமைக் கழக கழகம் சார்பில் காணொளி காட்சி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை
மக்கள் குறை தீர்க்கும் நாளில் 605 மனு
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி நீச்சல் பயிற்சி மூலம் தேர்தல் விழிப்புணர்வு: வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் திமுகவுக்கு ஆதரவு: தேவராஜன் அறிக்கை
கன்னியாகுமரியில் “சாகர்கவாச் ஆபரேஷன்” பாதுகாப்பு ஒத்திகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரத்தில் அரசு ஊழியர் கைது

September 13, 2025
27 Views
விவேகானந்த கேந்திரத்தில் அன்ன பூஜை
ரயில்வே சுரங்கப்பாதையில் பயணிகளுடன் மழை வெள்ளத்தில் சிக்கிய பேருந்து
இடிந்து விழும் தருவாயில் தபால் நிலையம்
மதுரை ஜடாமுனி கோவில் தெருவில் என்.எல்.எஸ்.மஹாலில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account