ராமநாதபுரம், டிச. 23 –
100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பாஜக அரசையும் அதிமுகவையும் கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று திமுக மாவட்ட செயலாளர் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு துணை முதல்வர் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் டிசம்பர் 24ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி அளவில் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும் அதிமுகவையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி தோழர்கள், கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர, பேரூர் கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், கிளைக் கழக, வார்டு கழகச் செயலாளர்கள், முன்னாள் இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பிஎல்ஏ 2 உள்ளிட்ட கழக தோழர்கள் அனைவரும் அவரவர் எல்லைக்குட்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள் உடன் தவறாது கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.



