மார்த்தாண்டம், டிச. 15 –
பளுகல் அருகே உள்ள கண்ணுமாமூடு பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன் மகன் அனிஷ் (24). கூலி தொழிலாளி. இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர். மதுப்பழக்கத்தை நிறுத்துமாறு கூறி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த இரு வாரமாக அனீஷ் வேலைக்கு செல்லவில்லை.
நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு வீட்டில் உறங்கச் சென்ற அனீஷ் மறுநாள் அதிகாலை பார்க்கும்போது வீட்டில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனடியாக உறவினார்கள் அவரை மீட்டு காரக்கோணம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்தபோது அனிஷ் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
இதை அடுத்து பளுகல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அனிஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


