நாகர்கோவில், டிச. 10 –
கன்னியாகுமரி – திருவனந்தபுரம் ரயில் பாதையில் ரெட்டை ரயில் பாதை பணிகள் நடக்கின்றன. இந்த பணியின் ஒரு கட்டமாக இரணியல் அருகே நுள்ளிவிளையில் புதிய ரயில்வே பயம் அமைக்கப்பட உள்ளது. பழைய பாலத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பினரும், புதிய இடத்தில் பாலம் அமைக்கப்பட வேண்டும் என்று மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இந்த நிலையில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 வாரங்களுக்கு முன் இந்த பிரச்சனை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நுள்ளி விளை பகுதியில் புதிய 10ம் தேதி இன்று பழைய மேம்பாலம் அமைந்துள்ள இடத்தில் பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதனால் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பும் வெளியானது. ஆனால் பழைய பாலத்தை இடித்து போக்குவரத்தை நிறுத்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறி ஒரு தரப்பினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொது மக்கள் சார்பாக நேற்று விஜய் வசந்த் எம்பி கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசினார்.
பாலத்தை இடிக்கும் பணியினை மக்கள் கோரிக்கை ஏற்ப திட்டமிட வேண்டும், மக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில் பாலம் சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட கூடாது என கோரிக்கை விடுத்தார். இதை தொடர்ந்து இன்று நுள்ளிவிளை பாலப் பணி நடக்கவில்லை. போக்குவரத்து வழக்கமான சாலையில் சென்றது. மறுஅறிவிப்பு வரும் வரை இந்த நிலை நீடிக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.


