நாகர்கோவில், டிசம்பர் 6 –
திருப்பரங்குன்றத்தில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன் மறியல் போராட்டம் நடத்திய எம் ஆர் காந்தி எம்எல்ஏ உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுபோல் குமரி மாவட்டத்தில் மொத்தம் 8 இடங்களில் மறியல் நடத்தினர்.



