ஈரோடு, நவ. 26 –
காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துறை தலைவரும் ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினருமான பாட்சா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருகிற நவம்பர் மாதம் 24 ந் தேதி முதல் பாசஞ்சர் ரெயில் சேலத்திலிருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மகுடஞ்சாவடி, சங்ககிரி, காவேரி ஆர் எஸ் வழியாக ஈரோட்டிற்கு காலை 7.25 மணிக்கு சென்று அடைகிறது. மறுமார்க்கத்தில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மேற்கண்ட வழியாக சேலத்திற்கு இரவு 8.45 மணிக்கு சென்று அடைகிறது. வாரத்தில் ஆறு நாட்கள் இந்த ரெயில் இயக்கப்படுகிறது.
வியாழக்கிழமை இந்த ரயில் இயங்காது. பலகோடி ரூபாய் செலவு செய்து புதிய ரயிலை உருவாக்கி சேலம் – ஈரோடு பயணிகள் ரயில் கட்டணம் ரூ.20 .அதே காவேரி ஆர் எஸ் க்கு சங்ககிரிக்கு ரூ.10 வசூலிக்கும் போது சேலம் ஈரோட்டிற்கு புதிய ரயிலை இயக்கி காலை 7.25 மணிக்கு வந்த பிறகு மீண்டும் இந்த ரயில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சேலம் சென்று அடைகிறது. வெறும் ரூ.20 கட்டணத்திற்கு புதிய ரயிலை இயக்கினால் ரயில்வே நிர்வாகத்திற்கு என்ன வருமானம் கிடைக்கும்.
எனவே கோவையிலிருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் வரை பயணிகள் (பாசஞ்சர்) ரயில் இயங்கி கொண்டு இருந்தது. கொரனா பெருந்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த ரயில் இயக்கப்படவில்லை. இது குறித்து ரயில்வே அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கைகள் அனுப்பியும் செவி சாய்க்கவில்லை.
ஆகவே சேலம், ஈரோடு வரை இயக்கப்படும் இந்த புதிய ரயிலையாவது கோவை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். இதனால் காலை திருப்பூர், கோவையில் வேலை செய்பவர்களுக்கும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்களுக்கும் கோவில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கும் இந்த ரெயில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


