சங்கரன்கோவில், நவ. 18 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் ராஜபாளையம் சாலையில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வ.உ.சியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, சேர்மத்துரை, பெரியதுரை, கிறிஸ்டோபர், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் பிச்சையா, ஓய்வு பெற்ற தாசில்தார் சூரியநாராயணமூர்த்தி, ஆதித்தமிழர் பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் மதன்குமார், வக்கீல் ஜெயக்குமார், சேர்மன் பாலசுப்ரமணியன், திமுக தொண்டரணி அப்பாஸ், இளைஞரணி அன்சாரி, மாணவரணி வீமராஜ், நெசவாளரணி கலைச்செல்வன், ராஜா, பூலியூர் கணேசன், ஐடி விங்க் சிவசங்கரநாராயணன் மற்றும் ஜெயக்குமார், பாலாஜி, மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



