மார்த்தாண்டம், நவ. 6 –
குமரி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கு இன்று தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கூண்டு கட்டிய லாரியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு திருவனந்தபுரத்திற்கு ஒரு லாரி புறப்பட்டது. அதிகாலை இந்த லாரி குலசேகரம் – தடிக்காரன் கோணம் சாலையில் சுருளகோடு அருகே உள்ள பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு வாகனம் எதிரே வந்தது. அந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக கேஸ் சிலிண்டர் லாரியை டிரைவர் சற்று ஒதுக்கி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கட்டுப்பட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது.
விபத்தை பார்த்தவர்கள் குலசேகரம் தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் சம்பவ இடந்து வந்து தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து லாரி டிரைவரை மீட்டனர். விசாரணையில் அவர் பெயர் மணிகண்டன் (22) என்பதும் தென்காசி மாவட்டம் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும் லாரியில் 310 கியாஸ் சிலிண்டர்கள் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் அந்த சிலிண்டர்களை பாதுகாப்பாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.



