ஒட்டன்சத்திரம், அக்டோபர் 9 –
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய, நகர கழகத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் ராஜவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் வாகனத்தை வழி மறித்து வன்முறை செய்த போலி வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை கைது செய்ய வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தினுடைய நீதி அரசர் கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராஜேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஒட்டன்சத்திரம் ஒன்றிய, நகர, கழக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய பொருளாளர் சு. வடிவேல் முன்னிலை வகித்தார். மேலும் தொழிலாளர் விடுதலை இயக்க மாநில துணைச் செயலாளர் தங்கராஜ், வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் பூக்கடை செந்தில், நகரச் செயலாளர் பூக்கடை வேலுச்சாமி, ஒன்றிய துணைச் செயலாளர் மாதவன், மகளிர் அணி பிரேமா உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய, நகர கழக விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



