தென்காசி. ஜூன் 4
கடையநல்லூர் ஒன்றியம் வேலாயுதபுரம் அருகே உள்ள ஆதரவற்ற அன்பு கரங்கள் இல்லத்தில் முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101வது விழாவை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது
விழாவிற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அமைப்பாளரும் கடையநல்லூர் யூனியன் துணை சேர்மன் ஐவேந்திரன் தினேஷ் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர் சுரேஷ், ,மாவட்ட திட்டகுழு உறுப்பினர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளருமான செல்லத்துரை கலைஞரின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகள் முதியோர்களுக்கு மதிய உணவை வழங்கிக் கொண்டாடினார் இதற்கான ஏற்பாட்டை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஐவேந்தர் தினேஷ் சிறப்பாக செய்திருந்தார் இதில் ஆதரவற்ற அன்பு கரங்கள் இல்ல பொறுப்பாளர் ஷ்யாம் இளைஞர் அணி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்