நாகர்கோவில், செப்டம்பர் 17 –
கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் 10வது தேசிய ஆயுர்வேத தினம் மற்றும் உலக நோயாளிகளின் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பு பிவு மற்றும் நிர்வாக குழு சார்பில் கல்லூரி முதல்வர் டாக்டர் கிளாரன்ஸ் டேவி தலைமையில் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அழகுமீனா கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
பேரணி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து துவங்கி, வேப்பம்மூடு சந்திப்பு வழியாக கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியை அடைந்தது. இதில் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள், நோயாளிகளின் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள், சுய மருத்துவத்தினால் வரும் பாதிப்புகள், ஆயுர்வேத மருந்துகள் இயற்கையானவை. எனவே மருத்துவரின் ஆலோசனை தேவையில்லை என்று பொதுமக்களிடையே நிலவிவரும் தவறான நம்பிக்கை, தவறாக வழிகாட்டும் மருத்துவம் சார்ந்த போலியான விளம்பரங்களுக்கு விழிப்பாக இருங்கள்.
மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி உட்கொண்டு எதிர்மறை விளைவுகளை தவிர்ப்போம். முதலிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விழிப்புணர்வு பேரணியின் இணை பேராசிரியர் டாக்டர் ஜெயகிருஷ்ணன், மருத்துவ கண்காணிப்பு அலுவலர் டாக்டர் டோமின் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.


