தென் தாமரைகுளம், செப். 17 –
பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இன்று காலை அகஸ்தீஸ்வரத்தில் பா.ஜ.க வினர் இனிப்பு வழங்கி பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய வர்த்தகப் பிரிவு தலைவர் செல்வ சுப்ரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய தலைவர் சுயம்பு, கோகுல கிருஷ்ணன் ஆகியோர் இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் சந்தையடி ராமதாஸ், ரமேஷ் மாறன், நம்பிநாதன், ஸ்ரீராமன், நாகமணி, தங்கநாடார் மற்றும் கிளை தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



