வேலூர், செப். 15 –
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெற்றோரை இழந்து மற்றொரு பெற்றோரால் பாரமரிக்க இயலாத குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கும் அன்பு கரங்கள் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் அன்பு கரங்கள் திட்டத்தில் பயனடையவுள்ள 177 குழந்தைகளுக்கு அடையாள அட்டை மற்றும் கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி ஜே.பி.எம் திருமண மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், முன்னாள் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் முகமது சகி, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மருத்துவர் மோனா பாஸ்கர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சஞ்ஜித், முதன்மை கல்வி அலுவலர் தயாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



