திருப்பூர், செப்டம்பர் 15 –
திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதிய கட்டிட அலுவலக திறப்பு விழா. திருப்பூர் பார்க் சாலையில் உள்ள புதிய கட்டிடத்தினை க. செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் திறந்து வைத்தார். இதில் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் அவர்களும் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகரச் செயலாளர் டி.கே.டி.மூ. நாகராஜ், வடக்கு மாநகர செயலாளர் தங்கராஜ், திமுக நிர்வாகி திலக்ராஜ் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் ஆர். கிருஷ்ணன், மதிமுக மாவட்ட செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் திமுக மத்திய மாவட்ட கழக நிர்வாகிகள், தெற்கு மாநகரக் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பெருந்திரளாக பங்கேற்றனர்.



