நாகர்கோவில், செப்டம்பர் 12 –
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 23 மாத கால ஓய்வூதிய பலன்கள் உடனடியாக வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சிஐடியு மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர் சங்கம் சார்பில் நாகர்கோவில் ராணி தோட்டம் பனிமனை முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இன்று 26-வது நாளாக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு டென்னிஸ் ஆண்டனி தலைமை வைத்தார். நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர். போராட்டத்தை எட்வின் மனோகர் தொடங்கி வைத்தார். இந்த காத்திருப்பு போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.


