By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொண்டி செய்யது முகமது அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் நியமித்து கல்வித்தரத்தை மேம்படுத்த கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தொண்டி செய்யது முகமது அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் நியமித்து கல்வித்தரத்தை மேம்படுத்த கோரிக்கை
இராமநாதபுரம்

தொண்டி செய்யது முகமது அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் நியமித்து கல்வித்தரத்தை மேம்படுத்த கோரிக்கை

Last updated: September 10, 2025 4:09 pm
September 10, 2025
41 Views
Share
SHARE

ராமநாதபுரம், செப். 10 –

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் செய்யது முகம்மது அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வித் திறன் மிகவும் பாதிப்படைந்து வருகிறது. மாணவர்கள் நலன் கருதி உடனடியாக தேவைக்கு ஏற்ப ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்று முன்னாள் மாணவர் தமுமுக மாநில செயலாளர் சாதி பாட்ஷா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தொண்டி அதை சுற்றி பல்வேறு கிராமங்கள் ஏழை எளிய மக்கள் விவசாயிகள், மீனவர்கள், சிறுபான்மை மக்கள் நிறைந்த பகுதி மக்கள் கல்வி வளர்ச்சியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற அடிப்படையில் 1946ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சையது முகம்மது கான் சாகிப் இப்பள்ளியை துவக்கினார். இதனால் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மிகவும் பயனடைந்தனர்.

அதனை தொடர்ந்து அவரது மகன் அமானுல்லா 1951 ஆம் ஆண்டு தரமான வகுப்பறை கட்டிடங்களுடன் சுமார் 13 ஏக்கர் பரப்பளவை கொண்ட இடத்தை செய்யது முகமது உயர்நிலைப் பள்ளியை மேம்படுத்த அரசுக்கு தானமாக வழங்கினார். சென்ற ஆண்டு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தானமாக வழங்கிய குடும்ப உறுப்பினர்களை அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இங்கு கல்வி பயின்ற பலர் சிறந்த எழுத்தாளராகவும் நீதிபதிகளாகவும் டாக்டர்கள் இன்ஜினியர்கள் ஆசிரியர் உள்ளிட்ட உயர் பதவியை வகுத்து வருகின்றனர். இந்த பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு ஏராளமான மாணவர்கள் பயனடைந்தது வருகின்றனர்.

இந்நிலையில் சில ஆண்டுகளாக இப்பள்ளி கல்வி தரம் உயர்ந்து மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் சிறப்பாக இருந்தன. தற்போது சில நாட்களுக்கு முன்பு எட்டு ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் உட்பட இடமாற்றம் செய்யப்பட்டனர். ஒரே நேரத்தில் அதிகமான ஆசிரியர்கள் இடமாற்றம் செய்து இங்கு காலி பணியிடம் ஆனதால் மாணவர்களின் கல்விதிறன் மிகவும் பாதிப்படைந்து விட்டது. தற்போது தலைமை ஆசிரியர் இப்பள்ளிக்கு வந்திருக்கிறார். ஆனால் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களுக்கு கல்வி என்பது கேள்விக்குறியாகிவிட்டது.

அதுமட்டுமின்றி ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய மைதானம் தொண்டியில் தான் இருக்கிறது. ஆனால் போதிய பராமரிப்பு இன்றி கருவேல மரங்கள் மண்டி நிற்கிறது. இதனால் மாணவர்கள் விளையாட ஏற்ற சூழல் இல்லை. மாணவர்கள் சுகாதாரமாக இருக்க தேவையான கழிப்பறை வசதிகளும் இல்லை. கழிப்பறை கட்டப்பட்டும் பல நாட்களாக திறக்கப்படாமல் இருக்கும் அவலம். இப்பள்ளி மாணவர்கள் தமிழக முதல்வர் கோப்பைக்கான போட்டியிலும் இன்னும் பல்வேறு போட்டிகள் மாவட்டத்தில் முதலிடம் பெற்று மாநில அளவில் விளையாட தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். ஆனால் உடற்கல்வி ஆசிரியர் இல்லாததால் விளையாட்டில் அடுத்த கட்ட நிலைக்கு செல்ல முடியவில்லை.

இப்பள்ளி மாணவர்களின் நலக்கருதி தேவையான ஆசிரியர்கள் நியமித்தும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமித்தும் பள்ளி மைதானத்தை மேம்படுத்தி பாதுகாத்திடவும் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். பின் தங்கிய வரலாற்று சிறப்புமிக்க தொண்டி பகுதி மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் இப்பள்ளி மீது தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஊராட்சி ஒன்றிய கூட்டம் மிச்சர்… டீ… சாப்பிடும்
பி.எம்.கிசான் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்.
ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது
ராமநாதபுரத்தில் மகளிர் திட்ட துறையின் மூலம் மகளிர் சுய உதவி குழு
திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மேற்கூறை இல்லாத மேல் நிலை நீர்தேக்க தொட்டி

September 25, 2024
56 Views
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் 259வது ஜெயந்தி விழா
தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
இலவன் குளம் சாலை விரிவாக்கம் பணியினை எம்எல்ஏ ராஜா ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account