வேலூர், செப். 08 –
முன்னே சென்ற பேருந்தை முந்த முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் நூல் இழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இரண்டு பேருக்கு இடையே சிக்கிக்கொண்ட இளைஞர்கள் நூல் இழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி.
வேலூர் மாநகரத்தில் உள்ள தொரப்பாடி பால விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ராஜ்குமார் அவரது மகன் விஜய் (18). இவர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் பாலிடெக்னிக் படித்து வருகிறார். இவர் வேலூரில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் உள்ள தினகரன் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் வேலூரை நோக்கி வந்துள்ளார். அப்போது அவருக்கு முன்னே சென்ற அரசு பேருந்தை முந்த முயன்ற போது எதிர் திசையில் லாரி வந்துள்ளது.
அப்போது அவரது இருசக்கர வாகனத்தில் பிரேக்கை பிடித்து இருசக்கர வாகனத்தை பின்னே வர முயன்ற போது, நிலை தடுமாறி பேருந்தில் இடித்து இரண்டு வாகனத்துக்கு நடுவே இடுக்கில் சிக்கிக் கொண்டு விபத்துக்குள்ளானது. இதில் விஜய் நூல் இழையில் உயிர் தப்பி அரசு பேருந்து பின் டயரில் விஜயின் வலது காலில் சிக்கி லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
பின்பு அங்கிருந்த பொதுமக்கள் வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்பு விரைந்து வந்த தெற்கு காவல் துறையினர் உடனடியாக காயம் அடைந்த விஜயை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு விஜய்க்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இது குறித்து தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னே சென்ற பேருந்தை முந்த முயன்ற போது இரண்டு பேருக்கு இடையே சிக்கிக் கொண்ட இளைஞர் நூல் இழையில் லேசான காயத்தில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.



